Review சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்ரி

EpicBooks

Member
Joined
Dec 5, 2024
Messages
10
Reaction score
9
Points
3
18655312.webpசேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

----

எனக்கு தெரிந்த வரையில், தமிழில் வரலாற்று புதினங்களுக்கு கல்கி, சாண்டில்யன் தான் என்கிற என் எண்ணம் தவறு மட்டுமில்லை, இவர்களுக்கு இடையில் நான் என்று கோகுல் சேஷாத்ரி இடம் பிடித்துவிட்டார். சேரர் கோட்டை என்ற தலைப்பினால் சேரர்கள் பற்றியது என்று நினைத்திருந்தேன். ஆனால் சோழர்களை பற்றியது. அதுவும் தமிழர்களின் தலை சிறந்த அரசர்களில் ஒருவரான இராஜராஜரின் காலத்தை பற்றிய விறுவிறுப்பான இந்த நாவல்களை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.
 
Last edited:
  • Like
Reactions: kanchana