Articles ஆருத்ரா தரிசனம் 2024 / 2024 Arudra Darshan

Kadigai

New member
Joined
Dec 25, 2024
Messages
3
Reaction score
0
Points
1
ஆருத்ரா தரிசனம் இந்த ஆண்டு (2024) இல்லை. அடுத்த ஆண்டில் (2025) ஒருமுறை நடைபெறும். 2026 ஆம் ஆண்டு இருமுறை நடைபெறும். ஏன் இப்படி வரவேண்டும்?

தமிழர்கள் இவ்விழாவை என்று கொண்டாட வேண்டும் என்பதைத் 'திருவாதிரை' விண்மீனைக் கொண்டு அறிகின்றனர். முழு நிலவு திருவாதிரை விண்மீன் அருகில் தோன்றும் நாளே "ஆருத்ரா நடனம்" நடைபெறும் நாள். திருவாதிரை என்னும் பீட்டில்ஜீயஸ் (Betelgeuse) ஓரையான் உடுக்கணத்தில் (Orion Constellation) உள்ள ஒளி பொருந்திய சிவப்புநிற (Red Giant) விண்மீன். ஓரையான் உடுக்கணம் நடனமாடும் மனித உருவில் இருப்பதால் சிவன் ஆடும் நடனமாக பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு மார்கழி மாதத்தில் முழுநிலவு அன்று அமையும். ஆதிரை என்னும் திருவாதிரை வடமொழியில் ஆருத்ரா என அழைக்கப்படுதால். இக்காட்சி ஆருத்ரா நடனம் என அழைக்கப்படுகிறது.

நிலவுக்கு ஒரு சுழற்சியை முடிக்க 29 நாட்கள், 12 மணிநேரம், 44 நிமிடங்கள், 2.9 வினாடிகளும், பூமியைச் சுற்றி வர 27 நாட்கள், 7 மணிநேரம், 43 நிமிடங்கள் 11.5 வினாடிகளும் ஆகிறது. இந்த வேறுபாட்டின் விளைவாகத் திருவாதிரை அருகே முழுநிலவு வரும் கால இடைவெளி சீராக இல்லாமல் 350 நாட்களிலிருந்து 380 நாட்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் மாறிக்கொண்டு வரும். மார்கழி மாதம் டிசம்பர் - ஜனவரியில் வருகிறதல்லவா? ஜனவரி ஆரம்பத்தில் வரும் ஆண்டில் அதே ஆண்டில் டிசம்பர் கடைசியிலும் வந்துவிடும். அவ்வாறு வருகையில் அடுத்த ஆண்டில் வராது. அந்த வகையில் சென்ற ஆண்டு (2023) ஜனவரி 6, டிசம்பர் 27 என இரண்டு முறை வந்தது. அதனால் இந்த ஆண்டு (2024) வராது. அடுத்த ஆண்டு (2025) இல் ஜனவரி 13 இல் வருகிறது. ஜனவரி ஆரம்பத்தில் வராததால் ஒருமுறை வரும்.

எந்த ஆண்டில் எப்போது வரும் என்பதை இந்த தளத்தில் காணலாம்.



Arudra Darshan is not this year (2024). It will happen once next year (2025). It will take place twice in 2026.

Why should it come like this?​


Thiruvadirai galaxy knows that Tamils should celebrate this festival. The day when the full moon appears near the Thiruvathirai galaxy is the day when the "Arudra dance" will take place. Light-matching Red Giant galaxy in Orion Constellation, Betelgeuse, Tiruvathirai. Since the Orayan dress is in the human form of dancing, it is seen as the dance of Shiva. This event will be held on the full moon day during the month of Margazhi. Since the Thiruvathirai called Aathirai is called Arudra in the northern language. This scene is called Arudra dance.

29 days, 12 hours, 44 minutes, 2.9 seconds, 27 days, 7 hours, 43 minutes 11.5 seconds to round the Earth. As a result of this difference, the full moon gap near Thiruvathirai will change from 350 days to 380 days every year without smoothness. Margazhi month is coming in December - January right? In the beginning of January, the same year will come at the end of December. If it comes like that, it won't come next year. That way it came twice last year (2019) January 6th December 27th. So this year (2024) will not come. Coming up on January 13 next year (2025). Since January didn't come early, it will come once.

You can see what year and when it will come on this site.
 
Last edited by a moderator: